பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா?? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 25, 2016

பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா??


பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், மாணவர் விபரங்களை பதிவு செய்ய, 'எமிஸ்' திட்டம் அறிமுகம் ஆகியுள்ளதால், 20 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, 20 லட்சம் பேர்
எழுத உள்ளனர். அவர்களின் பெயர், பிறந்த தேதி, பள்ளி போன்ற விபரங்கள், பள்ளி வாரியாக பதிவு செய்ய தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இப்பணிகளை, 15 ஆயிரத்துக்கும் மேலான பள்ளிகள் முடித்து விட்டன. ஆனால், அவற்றை தேர்வுத்துறைக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கவும், 'எமிஸ்' எனும், மின்னணு கல்வி மேலாண் திட்டத்தில் இணைக்கவும், அனை வருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர், பூஜா குல்கர்னி, பள்ளிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

இதில், ஆதார் எண், ரத்த பிரிவு, உயரம், எடை, வங்கி கணக்கு எண், உடன் பிறப்புகள் விபரம் என, 47 வகை தகவல்களை பதிவு செய்ய வேண்டும். 'இணைய தளம் மந்தமாக உள்ளதால், ஒரு நாளில், ஐந்து பேரின் விபரங்களை கூட பதிய முடியவில்லை; தகவல்கள், அவ்வப்போது மாயமாகிறது' என, ஆசிரி யர் சங்கங்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளன.

இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:இந்த ஆண்டு, 'எமிஸ்' பட்டியலில் இருந்து, பொதுத் தேர்வுகளுக் கான தகவல் பெற போவதாக, அதிகாரிகள் கூறி யுள்ளனர். அதனால், பொதுத் தேர்வு எழுதும் மாண வர்களின் விபரங்களை, தேர்வுத்துறைக்கு அனுப்பு வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பல பள்ளிகளில் இணையதள வசதி இன்றி,தனியார் இணைய தள மையங்களில் ஆசிரியர் கள் காத்திருக்கின்றனர்.எனவே,பொது தேர்வை யும், 'எமிஸ்' திட்டத்தையும் இணைக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங் கள், தேர்வுத்துறைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்,திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment