தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 28, 2017

தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்?

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலை வர் பதவிக்கு முனியப்பா என்பவர் தாக்கல் செய்த வேட்புமனு நிரா கரிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது.

அப்போது நீதிபதி, ‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நான் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா, இல்லையா? என்றும் கேட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்று மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.

பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.நெடுஞ்செழியன், ‘‘உள்ளாட்சி தேர்தலை நடத்தத் தேவையான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘தமிழகத்தில் மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அவகாசம் வழங்கியுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அன்றைய தினம் தெரிவிக்க வேண்டும்’’என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment