சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 26, 2017

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ்முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு சைதை
துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது |

 ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைதேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை, சைதைதுரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது. இதுகுறித்துமனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:- இலவச பயிற்சி சைதை துரைசாமியைதலைவராகக் கொண்டு இயங்கும் மனிதநேய பயிற்சி மையம்,மத்திய-மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் பல்வேறுதேர்வுகளில் கலந்துகொள்வதற்காக மாணவர்களுக்கு இலவசபயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அளிக்கப்பட்ட இலவசபயிற்சிகளில் கலந்துகொண்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றபணிகள் முதல் பல்வேறு வகையான பணிகளில் 2,838 பேர்தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மற்றும் பல்வேறுமாநிலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இந்தமையம் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.போன்ற பணிகளின் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சிவகுப்பை உடனடியாக தொடங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வரைநடத்த இருக்கிறது. நுழைவுத்தேர்வு இந்த பயிற்சிக்கான தகுதியும்,ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக,மனிதநேயம் தமிழகத்திலுள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில்நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதற்கான நுழைவுத் தேர்வுஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வு எழுதி, அதிகமதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சிவழங்கப்படும். இந்த தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும்எல்லாதரப்பு மாணவர்களும் எழுதும் வகையில், அடிப்படைபொதுஅறிவு சார்ந்தவையாகவே இருக்கும். இந்த வினாக்களுக்குவிடையளிப்பதற்கு அதிகபட்ச கூடுதல் திறமை தேவையில்லை.மாணவர் தேர்ந்தெடுப்பில் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு உண்டு. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்குமேல் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வுமதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே இடம்வழங்கப்படும். ஆனால், அந்த மாணவ-மாணவியர்களும்நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். கடைசி தேதி இந்த பயிற்சிவகுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.sai-d-ais.com என்கிறமுகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளப் பயிற்சிக்காகஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காகவிண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017 ஆகும். 22.4.2017முதல் அனைத்து மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கானதங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மேற்கண்டஇணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில்தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசுஅதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம்கையெழுத்து பெற முடியாதவர்கள், தங்களது புகைப்படம் உள்ளஅடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும்.இதுவே அனுமதிச் சீட்டாகும். தொடர்புகொள்ள வேண்டியதொலைபேசி எண்: 2435 8373, 9840106162. இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment