வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அதிகப்படியான அபராத கட்டணம் வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 28, 2017

வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அதிகப்படியான அபராத கட்டணம் வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு

வங்கிக் கணக்கில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்துக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான அபராத கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் ஆம் தேதி முதல், குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வால் எழுத்துப் பூர்வமாக செவ்வாய்க்கிழமை பதில் தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: -

மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து சரியான கட்டணத்தையே வங்கிகள் வசூலிக்க வேண்டும். தங்களது சேவைகளுக்காக சராசரியாக வசூலிக்கும் கட்டணத்தை விட அதிகப்படியான தொகையை அபராதமாக வசூலிக்கக்கூடாது.

அதேபோல், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள்படி, மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பில் ஏதேனும் மாற்றம் செய்தாலோ, அபராத கட்டணத்தில் ஏதேனும் மாற்றம் செய்தாலோ, வாடிக்கையாளர்களிடம் அதுகுறித்து ஒரு மாதத்துக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment