தத்கல் முறையில், ரயில் டிக்கெட் முன்பதிவை, 50 வினாடிகளில் முடிக்கும் வகையில் புதிய வசதியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்படுத்தி உள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணைய தளம் மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். எனினும், கூடுதல் கட்டணத்துடன் ஒரு நாள் முன்னதாக, தத்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு நடைமுறை அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி 7 ம் தேதி, 'ரயில் கனெக்ட் ஆப்' என்ற புதிய ஆப் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தியது.
ஸ்மார்ட் போன்களில் இந்த ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து கொண்டு, 'பேடிம்' பணம் செலுத்தும் வசதி மூலம், தத்கல் ரயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்ய முடியும். முதலில், ஏ.சி., பெட்டிக்கு தான், இந்த நடைமுறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. கடந்த ஏப்., 9ம் தேதி முதல், படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுக்கும் இதன் மூலம் முன்பதிவு செய்யலாம் என இந்த வசதி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம், 50 வினாடிகளில் தத்கல் டிக்கெட் முன்பதிவை செய்யலாம் எனவும் ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment