அதிக மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாணவர்களைப் பார்க்கக் கூடாது: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 1, 2017

அதிக மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாணவர்களைப் பார்க்கக் கூடாது: திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிடுகிறார் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார்
நல்ல அறவழியில் மாணவர்களை உருவாக்க வேண்டுமே தவிர, மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெறும்
இயந்திரங்களாக எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் பார்க்கக் கூடாது என திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வெள்ளிவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்று வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு பேசியது:
ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களை இந்தியாவின் வளர்ச்சிக்காகவே உருவாக்குகிறது. அதில் மானுட வாழ்வின் பண்புகளான உண்மை, நேர்மை, எளிமை, கருணை, தியாகம் ஆகியவற்றை இறுதி வரை பின்பற்றும் வகையில் மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் தியாகம் செய்ய வேண்டும்.
இதில் பெரும்பாலான பெற்றோர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து மேற்படிப்புக்கு அனுப்பவே விரும்புகின்றனர்.
இதுபோல் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்களாகப் பெற்றோர்கள் பார்க்கக் கூடாது. இதைத் தவிர்த்து நல்ல அறவழியில் மாணவர்களை உருவாக்க வேண்டும். இப்போதைக்கு இதுபோன்றவர்கள்தான் நாட்டுக்குத் தேவை என அவர் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
'முன்மாதிரி முதல்வர்' என்ற விருதும் பள்ளி சார்பில் மாணிக் சர்க்காருக்கு அளிக்கப்பட்டது. அவர் தலைமையில் மாணவர்கள் நேர்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment