வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, April 13, 2017

வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்!!!

இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
ரயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க, பல புதிய திட்டங்களை, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. இவற்றை, ஐ.ஆர்.சி.டி.சி., அமல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி 
அறிமுகப்படுத்தப்பட்டது.
டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், அதன் வாயிலாக செலுத்த வசதி செய்யப்பட்டது. இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த விபரங்கள், பயணியின் மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில் மூலம் தெரிவிக்கப்படுவதால், காகித பயன்பாடு வெகுவாக குறைந்தது.
புது வசதி :
டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்காக, இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் வீட்டிற்கு வந்து, டிக்கெட்டை கொடுத்துவிட்டு அதற்கான கட்டணத்தை பெற்றுச் செல்லும், 'கேஷ் ஆன் டெலிவரி' முறையை, நாடு முழுவதும், 600 நகரங்களில், ஐ.ஆர்.சி.டி.சி., துவங்கியுள்ளது.இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், ஆதார் அட்டை மற்றும், 'பான்' அட்டை வைத்திருக்க வேண்டும்.
ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் போது, சி.ஓ.டி., எனப்படும், 'கேஷ் ஆன் டெலிவரி'யை தேர்வு செய்ய வேண்டும்.பயண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்கையில், இந்த வசதியை பயன்படுத்த முடியும். இவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதற்கான பணம், பயணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment