தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, April 17, 2017

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்!

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், நர்சரி, மெட்ரிக் வகைகளில், 11 ஆயிரத்து, 980 பள்ளிகள் உள்ளன.இவற்றில், 47 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக அளவில் கல்வி கட்டணம் பெறுவதாக, புகார்கள் உள்ளன. அதை கட்டுப்படுத்த, 2010ல், கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.
கமிட்டி தலைவராக இருந்த, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம், ௨௦௧௬ டிசம்பரில் முடிந்தது. அவரது பதவி காலத்திலேயே, நடப்பு கல்வி ஆண்டுக்கான, கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து விட்டார்.
இந்நிலையில், கல்வி கட்டண கமிட்டி, ஓராண்டாக செயல்படவில்லை. கமிட்டியின் புதிய தலைவராக, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மாசிலாமணி, ஏப்ரல் முதல் வாரத்தில் பதவியேற்றார்.
அனைத்து, மெட்ரிக், நர்சரி பள்ளிகளின் பட்டியலை பெற்று, அவற்றின் கல்வி கட்டண நிலையை ஆய்வு செய்துள்ளார்.இதையடுத்து, புதிய கல்வி ஆண்டில், கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான, தகவல்களை தயார் செய்து வைக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உரிய விபரங்களை தயார் செய்த பள்ளிகளுக்கு, வரும், 17ம் தேதி முதல், கட்டண நிர்ணயம் குறித்த விசாரணையை துவங்க, கல்வி கட்டண கமிட்டி முடிவு செய்துள்ளது. அதில், பள்ளிகள், கல்வித்துறையின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment