ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த அவசியமானதாக இருக்கும் இண்டர்நெட் இணைப்பு எல்லா நேரங்களிலும் வேகமாக இருக்காது. சில சமயம் வை-பை, சில சமயம் மொபைல் டேட்டா என ஸ்மார்ட்போன் பயன்படுத்த இண்டர்நெட் கட்டாயமாகி விட்டது. இதற்கு ஏற்ப மொபைல் டேட்டா மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்களும் இந்தியாவில் குறைந்து வருகின்றன.
எனினும் சில சமயங்களில் மொபைல் டேட்டா வேகம் காரணமே இல்லாமல் மிகவும் குறைவாக இருக்கும். அவசர காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரை கடுப்பாக்கி விடும். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்..,
செல்போன் கேச்சி:
ஸ்மார்ட்போனில் கேச்சி மெமரி அதிகம் இருந்தால் ஸ்மார்ட்போனின் வேகம் குறைவதோடு, இண்டர்நெட் வேகமும் குறையும். இதை சரி செய்ய ஒவ்வொரு செயலியிலும் கேச்சி மெமரியை அழிக்கலாம், அல்லது பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை டவுன்லோடு செய்து அனைத்து செயலிகளின் கேச்சி மெமரியை ஒரே கிளிக்கில் அழித்து விடலாம்.
தேவையற்ற செயலிகள்:
நீங்கள் பயன்படுத்தாத அதிக மெமரி கொண்ட செயலிகள் உங்களது ஸ்மார்ட்போனின் இண்டர்நெட் வேகத்தை குறைத்து விடும். மேலும் ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் விட்ஜெட்களை அழித்து விடலாம். பெரும்பாலும் இவை பின்னணியில் இயங்கும் போது அதிகப்படியான இண்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது, இதனால் நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்து இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முடியும்.
டெக்ஸ்ட்-ஒன்லி மோட்:
பிரவுசிங் செய்யும் போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தேவையில்லை எனில் பிரவுசரில் டெக்ஸ்ட்-ஒன்லி மோட் செட் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது பிரவுசிங் வேகம் அதிகமாக இருக்கும்.
பிரவுசர்களை மாற்றலாம்:
ஸ்மார்ட்போனில் நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர்களும் இண்டர்நெட் வேகத்தை வெகுவாக பாதிக்கலாம். இதனால் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல்வேறு பிரவுசர்களை பயன்படுத்தி பார்க்கலாம், இவ்வாறு செய்யும் போது சில பிரவுசர்களில் வேகம் அதிகரிக்கலாம்.
பேக்கிரவுண்ட் செயலிகள்:
ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகள் நீங்கள் பயன்படுத்தாத போதும் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இதன் காரணமாகவும் இண்டர்நெட் வேகம் குறையலாம். முதலில் இண்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் போது பேக்கிரவுண்டு செயலிகளை நிறுத்தலாம். இவ்வாறு செய்யும் போது இண்டர்நெட் வேகம் அதிகரிக்கலாம்.
No comments:
Post a Comment