தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 8, 2017

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீத்தாராமன் ஓய்வு பெற்ற நிலையில் புதிய ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்


தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக்
பெரோஸ்கான் இன்று சனிக்கிழமை சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்குமுன் மாநிலத் தேர்தல் ஆணையாளராக இருந்த பி.சீதாராமன் கடந்த மார்ச் 22-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் மாநிலத் தேர்தல் ஆணையாளர் பதவி காலியாக இருந்தது.
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் முழு பொறுப்பு மாநில தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது. இந்நிலையில், உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மே மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 10 நாள்களுக்கும் மேலாக காலியாக இருந்த மாநிலத் தேர்தல் ஆணையாளர் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கும் பணியில் தமிழக அரசு கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாலிக் பெரோஸ் கானை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
மாலிக் பெரோஸ் கான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்தவர். அரசுத் துறைகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்த அவர், ஓய்வு பெறுவதற்கு முன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையாளராக இருந்தார். ஓய்வு பெற்று சில காலங்கள் ஆன நிலையில், அவர் மாநிலத் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அது தொடர்பான பணிகளில் சிறப்பான அனுபவம் பெற்றவர். மாநிலத் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் மாநிலத் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்படி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
அவர் ஆணையாளராகப் பொறுப்பேற்றுள்ள மாலிக் பெரோஸ் கானுக்கு சவாலான உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்

No comments:

Post a Comment