பாரத ஸ்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறு
சேவைகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு பெட்டகத்துக்கான வாடகைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பெட்டகத்தை கட்டணமின்றி பயன்படுத்தும் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.
காசோலைகளை பொருத்தவரையில், நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், நிதியாண்டில் 50 காசோலைகளை இலவசமாக பயன்படுத்தலாம். அதன்பிறகு ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படும். இதன்படி, 25 காசோலைகள் கொண்ட காசோலை புத்தகத்துக்கு ரூ.75 கட்டணம் மற்றும் சேவை வரி பெறப்படுகிறது. 50 காசோலைகள் கொண்ட புத்தகத்துக்கு சேவை வரி நீங்கலாக ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.
இதேபோல், வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்குதல் உள்ளிட்ட சேவைகளை அளிப்பதற்கு ரூ.20 கட்டணமாக பெறப்படும் என்று அதில் பாரத ஸ்டேட் வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் தங்களது கணக்கில் மாதாந்திர சராசரி இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment