பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், செய்முறைத் தேர்வுக்கான மாதிரி வடிவமைப்பு வினாத்தாள் குறித்து கல்வித் துறை அறிவிப்பு வெளியிடுமா ? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 5, 2018

பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், செய்முறைத் தேர்வுக்கான மாதிரி வடிவமைப்பு வினாத்தாள் குறித்து கல்வித் துறை அறிவிப்பு வெளியிடுமா ?

பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், செய்முறைத் தேர்வுக்கான மாதிரி வடிவமைப்பு வினாத்தாள் குறித்து
கல்வித் துறை அறிவிப்பு வெளியிடுமா என ஆசிரியர்கள், மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். நிகழ் கல்வியாண்டில் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்குபொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசின் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதற்கான கால அட்டவணையும், கருத்தியல்தேர்வுக்கான (Theory Exam) அரசு மாதிரி வினாத்தாளும்வெளியிடப் பட்டுள்ளது. அறிவியல் சார்ந்த கருத்தியல் தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வுக்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வு நிகழ் கல்வியாண்டின் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு 18}ஆம் தேதி தொடங்கி 31}ஆம் தேதி வரை மாநில அளவிலான திருப்புதல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் பொது அறிவியல் சார்ந்த இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் தொழில் கல்வி சார்ந்த தட்டச்சு, வேளாண் செய்முறைகள், இயந்திரவியல், கணக்குப் பதிவியல், தணிக்கையியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு கல்வித் துறையால் இதுவரை வழங்கப்படவில்லை. செய்முறைத் தேர்வுக்கு மிகவும் குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து அரசு கல்வித் துறை அறிவிப்பு வெளியிடாததால் எந்த அடிப்படையில் மாணவர்களை தயார்படுத்துவது என புரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனால், முதல் முறையாக அரசு பொதுத் தேர்வைச் சந்திக்க உள்ள பிளஸ்}1 மாணவர்களுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, செய்முறைத் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பை கல்வித் துறை உடனடியாக வெளியிட வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment