ஜனவரி 29இல் பட்ஜெட் கூட்டத்தொடர்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 15, 2018

ஜனவரி 29இல் பட்ஜெட் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்திருந்தது.
இதைகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடைபெறுகிறது. இதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடக்கிறது.
இரண்டாவது அமர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடக்கிறது.இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், ஜனவரி29ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்துவார். அதேநாளில், பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
இதுகுறித்து மாநிலங்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “குடியரசு தலைவரால் மாநிலங்களவை வரும் 29ஆம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அவை அலுவல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியுடன் நிறைவடைகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment