போனஸ் பணம் கைக்கு வரவில்லை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 15, 2018

போனஸ் பணம் கைக்கு வரவில்லை!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த, 8ல் வெளியானது. கடந்த, 9ல், அனைத்து அலுவலகங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது.
ஆனால், அறிவிக்கப்பட்ட போனஸ், நேற்று மாலை வரை யாருக்கும் வழங்கப்படவில்லை.
இது குறித்து, கருவூலத்தில் விசாரித்தபோது, 'பொங்கலுக்கு பிறகே, வங்கி கணக்கில் போனஸ் பணம் வரும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறுகையில், ''அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில், சி மற்றும் டி பிரிவினர், பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு, பொங்கலுக்கு முன், போனஸ் தொகையை, வங்கி கணக்கில் செலுத்தினால், கடன் வாங்கும் நிலை ஏற்படாது,'' என்றார்.

No comments:

Post a Comment