ஆசிரியர்களுக்கு பயிற்சி 25ம் தேதி துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 23, 2015

ஆசிரியர்களுக்கு பயிற்சி 25ம் தேதி துவக்கம்

        அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் புத்தக படிப்பு மட்டுமல்லாமல், மாணவ, மாணவியரின் கற்பனை திறன், பிற திறமைகளை வளர்க்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

        அந்த வகையில், நீலகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சார்பில், 6,7,8 ஆசிரியர்களுக்கான பயிற்சி, வரும், 25ம் தேதி வழங்கப்பட உள்ளது.எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் கூறுகையில்,'நடுநிலை வகுப்பில், படைப்பாற்றல் கல்வி முறையில், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள, 1,006 ஆசிரியர்களுக்கு, 60 முதன்மை கருத்தாளர்கள் மூலம், வலுவூட்டும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன' என்றனர். முதற்கட்டமாக, முதன்மை கருத்தாளர்களுக்கு, ஊட்டி பிலோமினா பள்ளியில் பயிற்சி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment