ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு 2ம் கட்ட சேர்க்கை அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 23, 2015

ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு 2ம் கட்ட சேர்க்கை அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாக இருப்பதால், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 600 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.

கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. இதையடுத்து, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட், 7ம் தேதி நடக்கிறது.

இதற்கான விண்ணப்பத்தை, நாளை முதல் இம்மாதம் 31ம் தேதி வரை கொடுக்கலாம். விண்ணப்பங்களை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளலாம் என, மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment