பள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 8, 2015

பள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி

மாணவ, மாணவியர் சுத்தமாக இருக்கும் முறை குறித்து, 'யுனிசெப்' உடன் இணைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி தரப்பட்டது. மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற துாய்மை இந்தியா திட்டத்தில், துாய்மையான இந்தியா, துாய்மையான பள்ளி என்ற திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியர் கழிப்பறையை பயன்படுத்தி பின், உணவருந்தச் செல்லும் முன், கை கழுவுவது குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.

                இது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கல்வித்துறை அதிகாரிகளுக்கு, இரண்டு நாள் பயிலரங்கம் சென்னையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மற்றும் வீடியோ படங்கள் மூலம், விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment