மெட்ரோ ரெயில் நிலையங்களில் செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை என்ன? அதிகாரிகள் விளக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 10, 2015

மெட்ரோ ரெயில் நிலையங்களில் செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை என்ன? அதிகாரிகள் விளக்கம்

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையின் முதல் போக்குவரத்து கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. இதில் திரளான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பது, பயணிகளின் பாதுகாப்பு, ரெயில் நிலைய பாதுகாப்பு போன்றவை குறித்து பல்வேறு விதமான சிறப்பு நடவடிக்கைகளை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தற்போது அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் செய்ய வேண்டியவை எவை? செய்யக்கூடாதவை எவை? என இரண்டு தலைப்புகளில் தகவல்களை நடைமேடைகள், ரெயில் நிலையங்களில் ஒட்டி வைத்துள்ளனர்.

செய்யவேண்டியவை

* வரிசையில் நிற்கவும்.

* 15 கிலோ எடை அளவிலும், 60 செ.மீ. நீளம், 40 செ.மீ. அகலம், 25 செ.மீ. உயரம் அளவுக்கு மிகாமல் பொருட்கள் எடுத்துச் செல்லலாம்.

* குப்பை தொட்டிகளை பயன்படுத்தவும்.

* நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்தும்போது கைப்பிடியை பிடித்துக்கொண்டு செல்லவும்.

* நகரும் படிக்கட்டுகளில் இருந்து வெளியேறும் இடம் வந்தவுடன் நிற்காமல் வெளியேற வேண்டும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு வழிவிட வேண்டும்.

* ரெயில்கள் 30 வினாடிகளுக்கு மட்டும் நடைமேடையில் நிற்கும்.

* பயண அட்டை, டோக்கன்களை மெட்ரோ அலுவலர்கள் கேட்கும்போது காண்பிக்க வேண்டும்.

* மற்ற பயணிகளின் வசதிகளையும் கவனத்தில் கொள்ளவும்.

* உங்களுடைய உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

* நிலைய கட்டுபாட்டு அலுவலரை உதவிக்கு அணுகவும்.

* குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இருக்கைகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

* வாகன நிறுத்தும் இடத்தை வாகனங்களை நிறுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* நிலையங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகம் பொறுப்பில்லை.

செய்யக்கூடாதவை

* பயண அட்டை, டோக்கன் இல்லாமல் பயணம் செய்யாதீர்கள்.

* பயணம் செய்யும்போது, உங்களுடைய பயண அட்டை, டோக்கனை சக பயணிகளிடம் கொடுக்காதீர்கள்.

* நடைமேடையில் உள்ள மஞ்சள் கோட்டை ரெயில் கதவுகள் திறக்கும்வரை கடக்காதீர்கள்.

* இருப்பு பாதையில் இறங்காதீர்கள்.

* ரெயில் கதவுகளை திறக்க முற்படாதீர்கள்.

* மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் சுவரொட்டிகளை ஒட்டாதீர்கள்.

* பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதைகளில் நடக்காதீர்கள்.

* மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லாதீர்கள்.

* புகை பிடிக்காதீர்கள்.

* ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் சிற்றுண்டிகளை உண்ணாதீர்கள்.

* மதுபோதை மற்றும் கட்டுப்பாடில்லாத செயல்களை தவிர்க்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment