பள்ளி மாணவ, மாணவியரின் மெட்ரோ ரயில் பயணம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 9, 2015

பள்ளி மாணவ, மாணவியரின் மெட்ரோ ரயில் பயணம்

மெட்ரோ ரயில சுத்திப் பாக்கப் போறோம்' என, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரை, மெட்ரோ ரயிலில் பயணம் சென்று சுற்றிக் காட்ட, ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
மெட்ரோ ரயிலில் பயணக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாகவோ அல்லது அவர்களிடம் வசூலித்தோ, கட்டணம் செலுத்த முடியாது. எனவே, பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் இருந்து பயணக் கட்டணம் செலுத்தி, அரசு பள்ளி மாணவ, மாணவியரை அழைத்துச் செல்ல, ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் பேசி, மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லவும், கட்டண சலுகை பெறவும் முடிவு செய்துள்ளதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, கட்டண சலுகை இல்லாமல் பயணம் செய்ய வைக்கலாம் என்றும், அனுமதி மட்டுமே தேவை என்றும், தனியார் பள்ளியினர், கல்வித் துறையுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment