கல்வி முறையில் மாற்றம் தேவை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 5, 2015

கல்வி முறையில் மாற்றம் தேவை

நாட்டின் சீரான வளர்ச்சிக்கு கல்வியும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் கணிப்பொறியின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளதுநாட்டின் சீரான வளர்ச்சிக்கு கல்வியும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில்
கணிப்பொறியின் பயன்பாடு இன்றியமையாததாக உள்ளது.

கல்வி முறையில் ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இன்றைய கல்வித் திட்டத்தில் விவேகமான பல மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் நமது நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும்.

கணிப்பொறியால் நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அகற்ற முடியும். மேலும் கணினிப் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டால் எல்லோருக்கும் எல்லாவிதமான சேவைகளையும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வழங்க முடியும் என்றார்.

விழாவுக்கு தலைமை வகித்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி பேசுகையில், "மனிதன் தன் வாழ்நாளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் கற்கிறான். அதைத் தொடர்ந்து முன்னோரிடமும், நூல்களில் இருந்தும் கற்கிறான். இதைத் தொடர்ந்து அவன் பெற்ற அறிவு, ஞானமாக மாறும்போதுதான் அவனது வாழ்வு வெற்றிகரமானதாக மாறுகிறது. இவற்றைப் பெற விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தேவை. இன்றைய மாணவ சமுதாயம் இந்த இரண்டையும் தங்களது வாழ்க்கையில் கைக்கொண்டால் எளிதில் வெற்றி பெற முடியும்' என்றார். பட்டமளிப்பு விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 11 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தொழில்நுட்பம், மேலாண்மைப் படிப்பு முடித்த 388 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன..

No comments:

Post a Comment