கடிதம் எழுதிய ஆசிரியர்: வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, July 9, 2015

கடிதம் எழுதிய ஆசிரியர்: வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு

தன் மீதான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பள்ளி ஆசிரியர் கடிதம் எழுதியதால் அவரது வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வீரபாண்டியன் கிராமத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சந்திரசேகரன். பள்ளியைக் கைப்பற்றும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி அவர் மீது பள்ளிச்செயலர் அதிசயமேரி புகார் கூறினார்.

இதன் பேரில் சந்திரசேகரனை மாவட்டக் கல்வி அலுவலர், 2010இல் தாற்காலிக பணி நீக்கம் செய்தார். இந்த உத்தரவை தொடக்கக்கல்வித்துறை இணை இயக்குநர் ரத்து செய்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிசயமேரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது நீதிபதிக்கு, ஆசிரியர் சந்திரசேகரன் 60 பக்க கடிதம் எழுதியது நீதிபதிக்கு தெரியவந்தது. இதையடுத்து வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்து நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

மேலும் மனுதாரர் தனது குறையை வழக்குரைஞர் மூலமாகவோ அல்லது நேரிலோ பதிவாளருக்கு தெரிவித்து பரிகாரம் பெறமுடியும். அதை விடுத்து வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு நேரடியாக கடிதம் எழுதுவதை ஏற்கமுடியாது. இந்த வழக்கில் இருந்து நான் விலகியிருக்கிறேன். மற்ற நீதிபதிகளும் விலக முடிவு செய்தால் வழக்கில் தீர்வு கிடைக்காமல் போய்விடும் என குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment