மொபைல் வாடிக்கையாளர்கள் தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி (எம்என்பி) இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் புதிய வசதியை வழங்கவுள்ளன. இதுவரை, இந்த நடைமுறை மாநில அளவிலேயே செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று முதல் இந்த புதிய வசதி அமலுக்கு வருவதால், இனி கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்பவர்கள், புதிதாக சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
No comments:
Post a Comment