பொது மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, July 13, 2015

பொது மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்

ஆண்டுதோறும் மே மாதத்தில் நடத்தப்படும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுநிகழ் ஆண்டு எப்போது நடைபெறும் என ஆசிரியர்கள்எதிர்பார்த்துள்ளனர்.
ஆசிரியர்கள் தங்கள் விரும்பிய மாவட்டங்களுக்கு உள்ளானப் பகுதிகளுக்கும் அல்லது தங்களது சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் செல்வதற்கும் தமிழகம் முழுவதும் உள்ள காலி இடங்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து கல்வித் துறை சார்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்டப் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெறுவதற்கு 5 நாள் முன்பாக காலி இடங்கள் குறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும்.அதில் எந்தப் பணியிடத்துக்கும் தன்னிச்சையாக யாரையும் நிரப்பக் கூடாது ஆசிரியர்கள்என எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment