ஏடிஎம் இயந்திரங்களில் 8 மணிக்கு மேல் பணம் நிரப்ப வேண்டாம்’ - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, April 4, 2016

ஏடிஎம் இயந்திரங்களில் 8 மணிக்கு மேல் பணம் நிரப்ப வேண்டாம்’

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப செல்லும் வாகனங்கள் தாக்கப்படும் நிகழ்வு அதிகரித்து வருவதால் 8 மணிக்கு மேல் பணம் நிரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

பணம் நிரப்பும் ஏஜென்சி கள் காலையில் வங்கிகளிடம் பணத்தை பெற்றுக்கொள்ள வேண் டும். நகரங்களில் 8 மணிக்குள்ளும், கிராமப்புறங்களில் 5 மணிக்குள்ளும், நக்சல் பகுதிகளில் 3 மணிக்குள்ளும் பணத்தை நிரப்ப வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்துள்ளது. ஒருமுறைக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்ல வேண்டாம். இரண்டு பாதுகாவலர்கள் இருக்க வேண்டும். ஓட்டுநர்கள் அசம்பாவிதம் நடப்பதை தவிர்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள 8,000 தனியார் வாகனங்கள் தினமும் 15,000 கோடி ரூபாயை கையாளுகின்றன.

No comments:

Post a Comment