நகர மற்றும் கிராமப்புற பள்ளிகளுக்குள் மாணவர்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
கல்வித் தரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அந்த அமைச்சம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக தமிழகம், உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள 100 பள்ளிகளில் சோதனைரீதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி கிராம மற்றும் நகர பகுதி மாணவர்கள் வார இறுதி நாட்களில் பரஸ்பரம் மற்ற பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டியிருக்கும். பின்தங்கியுள்ள கிராமப்புற பள்ளிகளை கைதூக்கிவிட இத்திட்டம் உதவும் என அரசு கருதுகிறது.
No comments:
Post a Comment