பல்கலை பணி நியமன விதிமீறல்:தேர்தல் கமிஷனுக்கு புகார் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 10, 2016

பல்கலை பணி நியமன விதிமீறல்:தேர்தல் கமிஷனுக்கு புகார் !

மதுரை காமராஜ் பல்கலையில், புலத் தலைவர் பணி நியமனத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் நடந்துள்ளதாக, தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தல் காரணமாக, நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னையில் உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், கடந்த மாதம், 23ம் தேதி நடந்த, மதுரை காமராஜ் பல்கலை
சிண்டிகேட் கூட்டத்தில், 'எவ்வித பணி நியமனங்களோ, கொள்கை முடிவோ எடுக்க வேண்டாம்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், கடந்த 1ம் தேதி, பல்கலை ஜெனிட்டிக்ஸ் துறைத் தலைவர் அனிதா சிரோன்மணியை, பயோ டெக்னாலஜி துறை புலத் தலைவராக நியமித்து, பதிவாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது, தேர்தல் நன்னடத்தை விதிமீறல் என, பல்கலை கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானிக்கு, புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்

No comments:

Post a Comment