பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று(நவ.,3) வெளியிடப்பட்டுள்ளது.
துணைத் தேர்வு
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும். பின், ஜூன் - ஜூலையில் சிறப்பு உடனடி துணைத் தேர்வும்; செப்., - அக்., மாதங்களில், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வும் நடக்கும். செப்டம்பரில் நடந்த, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், அறிந்து கொள்ளலாம் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
செப்டம்பர் 2016 தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 04.11.2016 பிற்பகல் 3.00 மணி முதல் 07.11.2016 வரை நேரில் சென்று உரிய கட்டணத்தினை பணமாகச் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
விடைத்தாள் நகல் (copy of the Answer Sheet) பெறுவதற்கான கட்டணம்:
பகுதி – I மொழி - ரூ.550/- (இரு தாட்களுக்கு)
பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.550/- (இரு தாட்களுக்கு)
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/-
மறுகூட்டல் (Re-totalling) கட்டணம்:
பகுதி – I மொழி, பகுதி – II மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.305/- (இரு தாள் பாடங்கள்)
ஏணைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
பத்தாம் வாகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் மூலம் 04.11.2016 பிற்பகல் 3.00 மணி முதல் 07.11.2016 வரை நேரில் சென்று உரிய கட்டணத்தினை பணமாகச் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
மறுகூட்டல் (Re-totalling) கட்டணம் :
இரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் (Language, English) - ரூ 305/-
ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும்(Science, maths and social secience) - ரூ 205/-
தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment