நீதிமன்ற பணியிடங்கள்: நவ. 14, 15 -இல் சான்றிதழ் சரிபார்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 4, 2016

நீதிமன்ற பணியிடங்கள்: நவ. 14, 15 -இல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை உயர் நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வில் வென்றோருக்கு, வரும் 14, 15 -ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. முன்னதாக, எழுத்துத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகின.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிக்கான நேர்முக உதவியாளர் (92 காலியிடங்கள்), பதிவாளருக்கான நேர்முக உதவியாளர்கள், கணினி இயக்குபவர், தட்டச்சர் என 300 -க்கும் அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆகஸ்ட்டில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை நிலை, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை உள்ளிட்டவையும் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக் கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment