டோல்கேட்களை கட்டணம் இல்லாமல் பயன்படுத்துவதற்கான கால அவகாசம் நவம்பர் 1மொ் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதை அடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்களில் சில்லரை
தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் டோல்கேட்களை பயன்படுத்துவோர் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மக்களின் இந்த சிரமத்தை குறைப்பதற்காக, பண தட்டுப்பாடு சரியாகும் வரை டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
மீண்டும் நீட்டிப்பு:
நவம்பர் 14ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் டோல்கேட்களை பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிய உள்ள நிலையில், மேலும் 3 நாட்கள் டோல்கேட்களை கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment