பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில், ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச்சில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, பிறந்த தேதி, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தயாரித்து, தயார்
நிலையில் வைத்திருக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில், ஒவ்வொருவரின் ஆதார் எண்ணையும் இணைக்க, தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக, இம்மாத இறுதிக்குள், அனைத்து மாணவ, மாணவியரின் ஆதார் எண்களையும், சேகரிக்கும் பணியில் ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்.
இதுவரை ஆதார் எடுக்காத மாணவர்கள் கணக்கெடுக்கும் பணியும், அதற்காக, சிறப்பு முகாம்களை பள்ளிகளில் நடத்தவும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். பிளஸ் 2 தேர்வெழுத, ஆதார் எண் அவசியம் என கேட்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்களிலும், ஆதார் விவரம் சேர்க்கப்படும் என தெரிகிறது.
இதன் மூலம், மதிப்பெண் பட்டியல்களில் போலி தயாரிப்புகளை குறைக்கவும், குளறுபடிகள் நடக்காமல் தவிர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment