500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மக்கள் செய்ய வேண்டியவை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 9, 2016

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: மக்கள் செய்ய வேண்டியவை

1.டிசம்பர் 30 ஆம் தேதி வரையில் அனைத்து வங்கிகளிலும் தங்களுடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைப்பு நிதியாக எவ்வளவு வேண்டுமானாலும்  செலுத்திக்கொள்ளலாம்.
2.நவம்பர் 24 2016 வரைவங்கி கணக்கில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். வாரத்திற்கு மொத்தம் 20 ஆயிரத்திற்கு உள்ளான தொகையை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்
3.பழைய நோட்டுகளை அனைத்து வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் அடையாள அட்டையை காண்பித்து 500 மற்றும் 1000 ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம்.
4.நவம்பர் 24 ஆம் தேதிவரை அதிகபட்சமாக 4,000 ரூபாய் வரையில்தான் வங்கிகளில் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முடியும்.
5.ரூபாய் நோட்டுக்கள் அல்லாத மற்ற பண பரிவர்தனைகளான செக், டெபிட் கார்ட் உள்ளிட்டவைகளுக்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல் பரிவர்தனையை தொடரலாம்.
6. இன்று இந்தியா முழுவதும் ஏடிஎம் மையங்கள் வேலை செய்யாது.. சில இடங்களில் நாளையும் வேலை செய்யாது.
7. ஏடிஎம் மையங்கள் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் முதல் நவம்பர் 18 2016 வரை 2000 ரூபாய் வரையில்தான் பணம் எடுக்க முடியும். நவம்பர் 19 2016 முதல் அது 4000 ரூபாயாக உயிர்த்தப்படும்.
8. நவம்பர் 11 நள்ளிரவு வரையில் கீழ்கண்ட துறை அலுவலகங்களில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லும்.
☻ அனைத்து அரசு மருத்துவமனைகள்
☻ ரயில் மற்றும் அரசு பேருந்து டிக்கெட் நிலையங்கள்
☻ விமான நிலைய டிக்கெட் அலுவலகங்கள்
☻ பெட்ரோல் மற்றும் டீசல் நிலையம்.
☻ மத்திய அரசால் அனுமதி பெற்ற அனைத்து ஆயில் நிலையங்கள்.
☻ மத்திய - மாநில அனுமதி பெற்ற கூட்டுறவு கடைகள்.
☻ அரசு அனுமதி பெற்ற உடல் தகனம் செய்யும் இடங்கள்
☻ அரசு அனுமதி பெற்ற பால் நிலையங்கள்

No comments:

Post a Comment