அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்குசொத்தை !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 3, 2016

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்குசொத்தை !!

தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்குசொத்தைப் பல் பிரச்னை உள்ளதென தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறினார்.
வண்டலூரை அடுத்த ரத்னமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில்
அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவப் பரிசோதனை முகாம், விழிப்புணர்வு கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது.இதில் பங்கேற்க தாம்பரம், வண்டலூர் சுற்றுப்புறங்களில் உள்ள 11 அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 1,722 மாணவர்கள், தாகூர் பல் மருத்துவக் கல்லூரிக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சொத்தைப் பல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கான இலவச அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

.இந்த முகாம் குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறியது:அரசு பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேர் உரிய பராமரிப்பின்மையால் பல் சொத்தையாகி பல்லை அகற்றும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் பல் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். பல் துலக்குவதன் அவசியம் குறித்து உரிய விழிப்புணர்வை உருவாக்குவதில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment