அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளி கல்வி துறை செயலாளர் நேரில் ஆஜர். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 8, 2016

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளி கல்வி துறை செயலாளர் நேரில் ஆஜர்.

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட கடைபிடிக்கவில்லை. இந்த பள்ளிகளுக்கு, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாற்காலிக அங்கீகாரத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.

எனவே, இந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரத்தை நீட்டிக்க கூடாது.  சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளின் விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்த அரசுக்கு  உத்தரவிட வேண்டும் என்று அந்த  மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உரிய ஆவணங்களுடன் முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா  சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

No comments:

Post a Comment