பள்ளிகளில் யோகா கட்டாயம் – நீதிமன்றத்தில் வழக்கு!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 2, 2016

பள்ளிகளில் யோகா கட்டாயம் – நீதிமன்றத்தில் வழக்கு!!

யோகா மனதை ஒருமுகப்படுத்துவதிலும், அமைதியை தருவதிலும் மிக சிறந்த கலை. இந்நிலையில், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும், டெல்லி மாநில பாஜக செய்தி தொடர்பாளருமான அஸ்வினிகுமார் உபாத்யாய என்பவர் பொது நல மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: “நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், என்சிடிஇ, சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், தேசிய யோகா கொள்கையை மத்திய அரசு நெறிமுறைபடுத்த வேண்டும். மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான சூழ்நிலையை உறுதி செய்வது அரசின் கடமையாகும். நாடு முழுவதும் அரசு செலவில் சுமார் 20 கோடி குழந்தைகள் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி பயில்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும் ‘யோகா மதச்சார்பற்றது’ என அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் கூறியிருக்கிறது” என்பதையும் அஸ்வினிகுமார் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment