எந்த ஏடிஎம்களில் பணம் உள்ளது..? இந்த வெப்சைட் மூலம் அறியலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 15, 2016

எந்த ஏடிஎம்களில் பணம் உள்ளது..? இந்த வெப்சைட் மூலம் அறியலாம்


ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்றதுடன் திரும்புகின்றனர். இந்த சிரமத்தை நீக்கவும் பொதுமக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க, கடந்த 10 மாதங்களாக ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு கடந்த 8- ஆம் தேதி பிரதமர்மோடி, 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதை தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் மக்கள் பணத்தை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்தெந்த இடங்களில் எந்தெந்த வங்கி ஏடிஎம்கள் செயல்பாட்டிலுள்ளது என்பதை துல்லியமாக காட்ட http://atmkaro.in/ என்ற வெப்சைட் வடிவமைக்கபட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

No comments:

Post a Comment