உலகில் அதிக சம்பளம் பெறும் தலைவர் யார்?? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 2, 2016

உலகில் அதிக சம்பளம் பெறும் தலைவர் யார்??

உலகில் 190க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. பெரும்பாலான நாடுகளில் அரசின் தலைவர்களாக அதிபர், பிரதமர் உள்ளனர். இந்தியா போன்ற நாடுகளில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளனர். உலக நாடுகளில் தலைவர்களில், அதிக சம்பளம் பெறும் தலைவர் என்ற பெருமையை பரப்பளவில் சிறியதாக இருக்கும் சிங்கப்பூர் பெற்றுள்ளது. இந்நாட்டின் பிரதமர் லீ சியான்

லுாங்கின் ஆண்டு வருமானம் 11.2 கோடி ரூபாய். இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உலகின் வல்லரசு நாடான அமெரி்க்க அதிபர் ஒபாமா இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 2.6 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் .ஹோலண்டு உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 1.8 கோடி ரூபாய். 4வது இடத்தில் உள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆண்டு வருமானம் 1.5 கோடி ரூபாய். உலக தலைவர்களோடு ஒப்பிடும் போது இந்திய தலைவர்களின் வருமானம் மிக குறைவு. இந்திய பிரதமரின் மாத வருமானம் 1.6 லட்ச ரூபாய். ஜனாதிபதியின் மாத வருமானம் 1.5 லட்ச ரூபாய். ஜனாதிபதியின் மாத வருமானம் 1.5 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது...

No comments:

Post a Comment