புதுதில்லி: தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள இலவச அழைப்பு சேவையின் மூலமாக, ஏர்டெல் நிறுவனத்தின் தொலைதொடர்பு கட்டமைப்பையே ரிலையன்ஸ் ஜியோ சிதைக்கிறது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஏர்டெல் நிறுவனம் புகார் செய்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு சேவை சந்தையில் முன்ணணியில் விளங்குவது ஏர்டெல் நிறுவனமாகும். தற்போது இந்த சந்தையில் புதிதாக நுழைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, இலவச இன்டர்நெட் மற்றும் அழைப்பு சேவைகளை அளிப்பதன் மூலம் சந்தையில் முன்னேறி வருகிறது. இதன் வரவு காரணமாக மற்ற நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜியோ நிறுவன சேவையை பயன்படுத்தும் அலைபேசிகளில் இருந்து ஏர்டெல் நிறுவன சேவையை பயன்படுத்தும் அலைபேசிகளுக்கு மேற்கொள்ளப்படும் கணக்கற்ற அழைப்புகள் பற்றிய விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை கேட்டுக் கொள்கிறோம்.
இதே நிலை தொடர்ந்தால் ஏர்டெல் நிறுவனத்தின் தொலைதொடர்பு கட்டமைப்பில் சிரமங்கள் உண்டாவதோடு, பயனாளர்கள் மோசமான அனுபவத்தை பெறுவார்கள். காலப்போக்கில் தொலைதொடர்பு கட்டமைப்பே சிதையும்.
மேலும் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு தற்போது புதிதாக 17000 இரு தரப்பு தொடர்பு முனையங்ககள் உண்டாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஜியோவின் 7.5 கோடி வாடிக்கையாளர்களின் அழைப்புகளை எங்களால் நிர்வகிக்க முடியும்.
ஆனால் ஜியோ நிறுவன தரப்பில் இன்னும் சேவைக்குறைபாடுகள் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment