தரம் உயர்த்திய பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையே; கல்வியாளர்கள் கவலை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 8, 2016

தரம் உயர்த்திய பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையே; கல்வியாளர்கள் கவலை

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும், என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:

பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இருந்தால்தான் நிர்வாகம் சரிவர இயங்கும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 37 துவக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. மூன்று ஆண்டு முடிவடையும்போது அப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிப்பர். நடப்பு கல்வியாண்டில் மூன்றாண்டு முடிந்து, ஆறுமாதங்களாகியும் அப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது கவலையளிக்கிறது.

பணிகள் பாதிப்பு:

இதனால் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, பதிவேடுகள் பராமரிப்பு, வகுப்பாசிரியர் நியமனம், ஆசிரியர் பணி ஒதுக்கீடு என பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியும் பாதிப்படைகிறது.மேலும், 65 கல்வி மாவட்டங்களில் உள்ள 104 உயர்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசு உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்பினால்தான் மாணவர்கள் முறையான கல்விபெற முடியும். இதுகுறித்து அமைச்சர், தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment