ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்கினால் 1% வரி !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, February 19, 2017

ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்கினால் 1% வரி !!

ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்கினால் 1% வரி !!
2016 – 2017 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டின் படி, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்குவோர் வருவாயில் இருந்து ஒரு சதவீத வரி செலுத்த வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது. ஆனால் உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கருப்புப் பணத்தைக் கொண்டு தங்க நகைகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தற்போது தாக்கல்
செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அந்த உச்சவரம்பு 2 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பொது சரக்கு பட்டியலில் தங்க நகை சேர்க்கப்படவுள்ளதால், வருமான வரிச்சட்டப்படி ஒரு சதவீத வரி வசூலிக்கப்படவுள்ளது. இந்த விதி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து பொருட்களை வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொருட்களை விற்றவர் அதே அளவு தொகையை அபராதமாக திரும்பிச் செலுத்த வேண்டும் என்ற சட்டமும் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment