பொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உத்தரவு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 22, 2017

பொதுத்தேர்வு மையங்களில் புகார் பெட்டி; நிர்வாகம் உத்தரவு!!!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும், புகார் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்க வேண்டும்,” என, கலெக்டர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை சார்பில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்கி, 30ம் தேதி வரையும்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச், 8ல் துவங்கி, 31 வரையும் நடைபெறவுள்ளது. திருப் பூர் மாவட்டத்தில், 189 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 63 மையங்களில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

மாணவர்கள், 11 ஆயிரத்து, 251; மாணவியர் 13 ஆயிரத்து, 991 என, மொத்தம், 25 ஆயிரத்து, 242 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 696 தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 80 மையங்களில் நடக்க உள்ளது. மொத்தம், 331 பள்ளிகளை சேர்ந்த, 14 ஆயிரத்து, 584 மாணவர்கள்; 14 ஆயிரத்து, 700 மாணவிகள் என, 29 ஆயிரத்து, 284 பேர் தேர்வு எழுத உள்ளனர். தனித்தேர்வர்கள், 900 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மாவட்டத்தில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, தலா, ஏழு இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; அங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வு நடக்கும் பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற, 63 தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். துறை தலைவர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக, 74 ஆசிரியர்கள்; அறை கண்காணிப்பாளர்களாக, 1,438 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில், 81 தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண் காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் துறை அலுவலர்களாக, 110 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளராக, 1,808 ஆசிரியர்களும் நியமனம் செய் யப்பட உள்ளனர்.

தேர்வுகளில், முறைகேடு செய்வதை தடுக்கவும், ‘காப்பி’ அடிப்பது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை கண்காணித்து தடுக்க, கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட் டுள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மூலம், 176 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட் டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்து, கலெக்டர் ஜெயந்தி பேசியதாவது:

தேர்வு மையங்களில் ஆய்வு செய்யும் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், தங்களது குறிப்புகளை பதிவு செய்ய, தனியாக பதிவேடு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ் வொரு தேர்வு மையத்திலும், புகார் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு நாளில், இலவச பஸ் பாஸ் எடுத்துவராவிட்டாலும், சீருடை அணிந்த மாணவ, மாணவியரை, பஸ்களில் அழைத்துச் செல்ல, போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். மாணவர் நலன்கருதி, தேர்வு நடக்கும் நாட்களில், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

மாணவ, மாணவியர், ‘எலக்ட்ரானிக்’ கை கடிகாரம் மற்றும் ‘மொபைல்’ போன்கள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அருகே, ஒலி பெருக்கிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கலெக்டர் பேசினார்

No comments:

Post a Comment