பறவைகளைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்: ஆய்வில் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 27, 2017

பறவைகளைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்: ஆய்வில் தகவல்

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் மேம்படும் என, ஆய்வொன்றில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரித்து வரும் செல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறதாம்.

இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment