17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 6, 2017

17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குப் புதிய
ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திங்கட்கிழமை வெளியிட்ட அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-
* ஆவின் நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் மாற்றப்பட்டு, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு சிமெண்ட் கழக நிர்வாக இயக்குநர் சி.காமராஜ் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆவின் நிர்வாக இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.
* தமிழ்நாடு உப்புக்கழக நிர்வாக இயக்குநர் டி.உதயசந்திரன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு கனிம நிறுவன (டாமின்) எம்.வள்ளலார் இடமாற்றம் செய்யப்பட்டு, சிறுபான்மையினர் நல இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.
* சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா மாற்றப்பட்டு, போக்குவரத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
* தொழில்துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர் அந்த பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா மாற்றப்பட்டு, தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியமர்த்தப்படுகிறார்.
* பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலாளர் வி.பழனிக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நஜிமுதீன் மாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக பணியமர்த்தப்படுகிறார்.
* சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) வி.அன்புசெல்வன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி மாற்றப்பட்டு, வணிகவரி இணை ஆணையராக (நிர்வாக) பணியமர்த்தப்பட்டுள்ளார்.
* பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு சிமெண்ட் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
* தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் மாற்றப்பட்டு தமிழ்நாடு கனிம நிறுவன (டாமின்) நிர்வாக இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
* போக்குவரத்து ஆணையர் சத்தியபிரத சாஹூ இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹர்சகாய் மீனா மாற்றப்பட்டு, தமிழ்நாடு உப்புக்கழக நிர்வாக இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.
* காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. When will be the teachers transfer couceiling !?!?!?!?

    ReplyDelete