மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 15, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்
ஐ.ஐ.டி. சட்ட திருத்த மசோதாவிற்கும் கூட்டத்தில் ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்த அகவிலைப்படி உயர்வு 2017 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment