வங்கிகளில் ரொக்க பரிவர்த்தனையின் உச்சவரம்பை ₹ 3 லட்சத்தில் இருந்து ₹ 2 லட்சமாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 21, 2017

வங்கிகளில் ரொக்க பரிவர்த்தனையின் உச்சவரம்பை ₹ 3 லட்சத்தில் இருந்து ₹ 2 லட்சமாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை.

நடப்பாண்டு பட்ஜெட்டில் வங்கிகளில் ₹ 3 லட்சம் வரை ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

₹ 3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு 100% அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரொக்கப் பரிவர்த்தனையை ₹ 3 லட்சத்தில் இருந்து ₹ 2 லட்சமாக குறைக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இம்மசோதா நிறைவேறினால் ₹ 2 லட்சத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment