5,000 ரூபாய் இருப்புத் தொகை: ஸ்டேட் வங்கி தரப்பில் விளக்கம்
ஜன்தன் வங்கி கணக்குகளை பராமரிப்பதற்காக செலவிடப்படும் தொகையை ஈடுசெய்யவே, குறைந்தபட்சம் 5,000 ரூபாய் இருப்புத் தொகையை பராமரிக்காத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டதாக ஸ்டேட் வங்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற பெண்கள் தொழில் முனைவோர் தேசிய மாநாட்டில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, 10 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளை பராமரிக்க அதிகம் செலவாகிறது எனத் தெரிவித்தார்.
எனவே அதனை ஈடுகட்டவே குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு இந்த அபராத தொகை பொருந்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment