டேராடூன் ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை: மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 6, 2017

டேராடூன் ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை: மார்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

டேராடூனில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு வரும் 31-ம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சிவான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: உத்தராஞ்சல் மாநிலம் டேராடூனில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியில் 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், சேர 7-ம் வகுப்பு படிக்கும் அல்லது முடித்த, 1.1.2018 ல் பதினொன்றரை வயதுக்கு குறையாமலும், 13 வயதை அடையாமலும் இருக்க வேண்டும்.
அதாவது 2.1.2005 க்கு முன் அல்லது 1.7.2006-க்கு பின்னர் பிறந்திருக்கக் கூடாது.
விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க கையேட்டை பெற பொதுப்பிரிவினர் ரூ.550 க்கும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.505-க்கும் வரைவோலையை “The Commandant, RIMC, Dehradun, Drawees Branch, ( State Bank of India, Tel Bhavan, Dehradun Bank Code 01576) Uttarahand’’ என்ற பெயருக்கு பெற்று, பதிவஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில், ‘தி கமாண்டன்ட், ராஷ்ட்ரிய பாரதிய செய்னா கல்லூரி, ராஷ்ட்ரிய இந்தியன் மிலிட்டரி, டேராடூன், உத்தராகாண்ட் 248 003’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை பெற கடைசி நாள் 30.3.2017. RIMC ல் இருந்து பெறப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment