ஊதிய முரண்பாட்டை பற்றி தொடர்ந்து பேசிவரும் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்கு ஒரு குழுவாக வாட்ஸ்அப் எனப்படும் இணைவழி ஒன்று சேர்ந்து போராட்டத்தைப் பற்றி மிகத்தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
உண்மையில்
2009 பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாநில அரசு முந்தைய ஊதிய குழுவில் செய்த
பிழையால் மாதத்திற்கு 13000 இழப்பு ஏற்படுவதாக புலம்புகின்றன.
இத்தகைய இழப்பினை 8 ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் தற்போது தமிழக அரசு அமைத்திருக்கும் ஏழாவது ஊதிய குழுவிலும் பெருத்த இழப்பு ஏற்படுமென்பதால் ஒன்றிணைந்து போராடவிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இன்னொரு அதிர்ச்சியான தகவல் அவர்களிடமிருந்து கிடைத்தது அதாவது இடைநிலை ஆசிரியர்களின் கல்வித்தகுதி பத்தாம்வகுப்பு என கருதியே முந்தைய ஊதிய குழுவிலிருக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இத்தகைய தவறினை செய்திருப்பதாக பெருங்கோபத்தோடு கூறுகின்றனர்.
இது உண்மையா என்று பார்க்கும் போது 5200-2800 அடிப்படை ஊதியம் என்பது பத்தாம்வகுப்பு கல்வித்தகுதிக்கான ஊதியத்தோடு (5200-2400) மிக நெருங்கியிருக்கிறது என்பதால் இந்த கூற்றும் உண்மையே என தெரிகிறது..
ஆக மொத்தம் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
கடந்த எட்டு ஆண்டுகளாக இதனை நிவர்த்தி செய்ய நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கும் போது அவர்களின் ஒட்டுமொத்த விரல்களும் அவர்கள் இடம் பெற்றிருக்கிற ஆசிரிய சங்கங்களை நோக்கி நீள்கின்றன.
அரசு தான் தவறிழைத்திருக்கிறது என்றால் நாங்கள் நம்பிக்கொண்டிருந்த எங்கள் சங்கத்தலைவர்களும் எங்களுக்காக ஒன்றுப்படாமல் அவர்களின் ஈகோவே பெரியதென்று எண்ணிக்கொண்டு இதுவரையில் வலுவான போராட்டத்தையும் நடத்தவில்லை என்றும் சொல்கிறார்கள். இதைவிட மேல்போய் தமிழகத்தின் பெரிய பெரிய ஆசிரிய சங்கங்களை சார்ந்த தலைவர்களுக்கும் இந்த ஊதிய முரண்பாடு பற்றிய முழுமையான இல்லாமையும் அரசிடம் இதனை தெளிவாக எடுத்துரைக்க முடியாமையும் ஊதிய இழப்புக்கு ஒரு கூடுதலான வியப்பான குற்றச்சாட்டையும் முன்மொழிகிறார்கள்.
இப்படி அரசும் அவர்கள் சார்ந்த சங்கங்களும் கைவிட்ட நிலையில் 2009 க்கு பிறகான பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் மிகப்பெரிய போராட முடிவெடுத்திருப்பதாக இரகசியமான தகவல் கசிந்துக்கொண்டிருக்கிறது....
ஊ.கார்முகில்
No comments:
Post a Comment