பிரதமர் பற்றி அவதூறு: ’வாட்ஸ்-அப்' குழு அட்மின் மீது வழக்குப்பதிவு.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 22, 2017

பிரதமர் பற்றி அவதூறு: ’வாட்ஸ்-அப்' குழு அட்மின் மீது வழக்குப்பதிவு..

பிரதமர் மோடியைப் பற்றிய ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் அடங்கிய பதிவை ’வாட்ஸ் - அப்' குழுவில் பகிர்ந்து கொண்டதாக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பிரதமரைப் பற்றிய அவதூறான கருத்துகள் அடங்கிய ஒரு பதிவு ’வாட்ஸ் - அப்' மூலம் பரப்பப்படுவதாக சங்காரி காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். குறிப்பிட்ட ஒரு ’வாட்ஸ் - அப்' குழுவின் மூலமாகவே அந்த சர்ச்சைக்குரிய பதிவு முதன்முதலில் பரப்பப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தக் குழுவை உருவாக்கிய நபர் (அட்மின்) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் திட்டமிட்டு இத்தகைய அவதூறுகளைப் பரப்பியது உறுதிப்படுத்தப்பட்டால், சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment