அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் விரைவில் வருங்கால வைப்பு நிதி
அங்கன்வாடி ஊழியர்களுக்கும், அங்கீரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்களுக்கும் (ஏஎஸ்ஹெச்ஏ) ஈஎஸ்ஐசி, ஈபிஎஃப்ஓ ஆகிய திட்டங்களின் பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்த 2 பிரிவு தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். இந்த இரண்டு திட்டங்களின் பலன்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அங்கான்வாடி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்கள் தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றவில்லை. அரசுக்காகவே பணியாற்றி வருகின்றனர்.
எனவே, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பற்காக பெண்கள்-குழந்தைகள் நலத் துறை அமைச்சகம், தொழிலாளர், சுகாதாரத் துறை அமைச்சகம், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (ஈஎஸ்ஐசி), இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்ஓ) ஆகிய திட்டங்களின் பலன்கள் அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் இனி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
இதுகுறித்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டங்களின் பலன்களை அளிப்பதற்கு மத்திய நிதி அமைச்சகமும் ஒப்புக்கொண்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார் தத்தாத்ரேயா.
No comments:
Post a Comment