துணை வேந்தர்கள் நியமனம் : தேர்தல் விதியால் தள்ளிவைப்பு !!
தேர்தல் நடத்தை விதி அமலால், அண்ணா பல்கலை, சென்னைப் பல்கலைகளுக்கான துணை வேந்தர் நியமனம், ஏப்ரல் இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலை துணைவேந்தராக இருந்த, தாண்டவனின் பதவிக்காலம், ஜனவரியில் முடிந்தது. உயர்கல்விச் செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு, பல்கலை
நிர்வாகப் பணிகளைகவனித்து வருகிறது. இந்நிலையில், சென்னைப் பல்கலையில், தேர்வு அதிகாரி மற்றும் பதிவாளர் பதவிகளும் காலியாகின. அவற்றை கவனிக்கும் பொறுப்பு, பேராசிரியர்களிடம் தரப்பட்டுள்ளது. துணை வேந்தர் இல்லாமல், நிர்வாகப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்த ராஜாராம் பதவிக்காலம், 2016, மே மாதம் முடிந்தது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணை வேந்தர், பாஸ்கரன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், இன்னும் புதிய துணை வேந்தரை தேர்வு செய்யவில்லை.பல்கலைகளின் நிர்வாகத்தை சீரமைக்க, இன்னும் ஒரு வாரத்திற்குள் துணை வேந்தர் பதவி களை நிரப்ப, உயர்கல்வித் துறை முடிவு செய்திருந்தது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பால், சென்னை மாவட்டம்முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்துள்ளன. அதனால், தேர்தல் முடியும் வரை, துணை வேந்தர் நியமனப் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment